விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலா, எள், நெல், உளுந்து, கம்பு, மக்காச்சோளம், தினை, தேங்காய் பருப்பு போன்ற விளைபொருட்கள் தினந்தோறும் வந்து சேர்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3348 மூட்டை விளைபொருட்கள் குவிந்துள்ளன. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.