விருத்தாசலம்: மணல் கடத்திய 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் நேற்று மணலூர் மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் இருந்து டாடா ஏஸ் வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்த காணாதுகண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், மணவாளநல்லூர் கிராமம் வேல்முருகன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து இவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி