வேப்பூர்: பெண் விஷம் குடித்து தற்கொலை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வி. புதூர் பகுதியைச் சேர்ந்த தேவி (46) நேற்று முன்தினம் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு விளைநிலத்திற்குச் சென்று விஷம் குடித்தார். மயக்கமடைந்த அவரை கணவர் சுப்பையா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி