வேப்பூர்: மாணவி வழக்கு 18 ஆம் தேதி ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சி. பி. சி. ஐ. டி. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (அக்.,8) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நேற்று நீதிபதி ஸ்ரீராம் விடுமுறையில் இருந்ததால் இந்த வழக்கு விசாரணை வருகிற 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி