சென்னையிலிருந்து முதுகுளத்தூர் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்.15) கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 25 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.