கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா 9 ஆம் நாளை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் காத்தவராயன் சாமி ஆகியோர் திருத்தேரில் அமர்ந்து திருவீதியுலா நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.