கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பேருந்து நிலையத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, பேருந்து நிலையத்தில் உடல் மெலிந்து ஆதரவின்றி படுத்துக் கிடந்த ஒரு பெண்ணைக் கண்ட பிரேமலதா விஜயகாந்த், உடனடியாகச் சென்று அவருக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார். இந்த நிகழ்வின்போது விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸும் உடனிருந்தார்.