காணாதுகண்டான்: கணவரை காணவில்லை என மனைவி புகார் அளிப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காணாதுகண்டான் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான ஜெய் சங்கர், கடந்த ஓராண்டாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 26 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது மனைவி பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய் சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி