மங்கலம்பேட்டை: கஞ்சா பதுக்கிய காவலாளி கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ராமலிங்கம் மகன் பாலமுருகன் (34) என்பவர் தனது வீட்டின் மேற்கூரையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, வீட்டின் மேற்கூரையில் ஓட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த பாலமுருகனை கைது செய்தனர். பாலமுருகன் அங்குள்ள கோவிலில் இரவு காவலராக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி