பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, பீரோவில் வைத்திருந்த 11 1/2 பவுன் நகைகள் மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீடு பூட்டியே இருந்த நிலையில் சாவி போட்டு திறந்து யாரோ நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
திருடு போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 6 ½லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.