கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 27) திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.