காட்டுமன்னார்கோவில்: விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே ராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (28) என்பவர், நண்பர் ஆனந்தகுமாருடன் (22) மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பும்போது, சோழத்தரம் அடுத்த அறந்தாங்கி அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தகுமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி