கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த மெய்யப்பனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 42 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம் மருதூர் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.