கருவேப்பிலங்குறிச்சி: காரில் மணல் கடத்தியவர் கைது

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சக்கரமங்கலம் வழியாக வெள்ளாற்றில் இருந்து காரில் மணல் கடத்தி வந்த மதியழகன் மகன் கஜேந்திரனை மடக்கிப் பிடித்தனர். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்து காரையும் 5 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி