விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி நோக்கி வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 25 மூட்டை (1.25 டன்) ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஹிதாயத்துல்லா என்பவரை கைது செய்தனர்.