கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து சென்றபோது சிறுவம்பார் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் எளிதில் தீப்பற்றும் பெட்ரோல் விற்பது தெரிந்தது. இது தொடர்பாக நாராயணசாமி மகன் முருகேசன் என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.