விழுப்புரத்தில் வாலிபர் மரணம்.. மருத்துவமனை கண்ணாடி உடைப்பு

விழுப்புரம் நகர பகுதியான காகுப்பம் பகுதியை சார்ந்த பாண்டியராஜன் (35) என்பவர் கடந்த 18ம் தேதி இருதய பிரச்சனை காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவரது இதயதுடிப்பு சீராக இல்லையென்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று( மார்ச் 22) நண்பகலில் பாண்டியராஜன் திடீரென உயிரிழக்கவே அவரது உறவினர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் தான் பாண்டியராஜன் உயிரிழந்து விட்டதாக கூறி மருத்துவமனை கண்ணாடியை உடைத்து விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் வலுகட்டாயமாக இறந்தவரின் உறவினர்களை தனியார் மருத்துவமனையிலிருந்து அப்புறப்படுத்தினர். 

இதனால் போலீசாருக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி சரவணன் சம்பவ இடத்தில் விசாரனை செய்து இறந்தவரின் உடலை தனியார் மருத்துவமனையிலிருந்து விழுப்புரம் தலைமை மருத்துவமனையான முண்டியம்பாக்கத்திற்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் பாண்டியராஜன் இறந்த உடன் அவரது உடலை உடனடியாக வெளியே எடுத்து வந்து வெயிலில் போட்டு விட்டதாக குற்றஞ்சாட்டினர்.

தொடர்புடைய செய்தி