அப்போது ஆத்திரமடைந்த அனந்தசேனன், மது போதையில், அங்கிருந்து இரும்பு கம்பியை எடுத்து தாக்கியதில் கிருஷ்ணசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனை தடுக்க வந்த அவரது மகன் குமரேசன், 39; மருமகள் அபிநயா, 30; ஆகியோரையும் அனந்தசேனன் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அனந்தசேனனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நேற்று அனந்தசேனனை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு