கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரிமா சங்கம் மற்றும் அபோட் இந்தியா லிமிடெட் இணைந்து நடத்திய இலவச தைராய்டு பரிசோதனை முகாம் இரண்டு இடங்களில் அரிமா சங்கத் தலைவர் சக்திவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றலரசு துவக்கி வைத்து துப்புரவு பணியாளர்களுக்கு இலவச தைராய்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பெண்ணாடம் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் செல்வன் அருள்முருகன் மாரிமுத்து செல்வராசு கலந்து கொண்டனர். பொருளாளர் பாண்டியன் மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் நிகழ்ச்சி அமைத்தனர்.