பெண்ணாடம்: 5 ஆடுகள் உயிரிழப்பு; காவல்துறை விசாரணை

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவரது மனைவி சங்கரி இவர்கள் கொட்டகை அமைத்து 5 ஆடுகள் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு சங்கரி வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது 5 ஆடுகளும் பலத்த காயங்களுடன் செத்துகிடந்தன. 

இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்ததில் அந்த ஆடுகள் செத்தது தெரிந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வேல்முருகன், பூவராகவன் ஆகியோர் செத்து கிடந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். அதன் பின்னர் அந்த ஆடுகள் புதைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி