சிறப்பு விருந்தினர்களாக உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் கவிஞானி. மு. ஞானமூர்த்தி, பேரூர்மன்றத் தலைவர் அமுதலெச்சுமி ஆற்றலரசு, வர்த்தகர் சங்கத் தலைவர் இராமோகன், அருணா மேல்நிலைப்பள்ளி செயலாளர் மு. ஞானப்பிரகாசம், பள்ளி வளர்ச்சிக்குழு தி. செம்பியன், வெ. சுந்தரபாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் என். சுகுணா, லயன்ஸ் சங்கத் தலைவர் வெ. சக்திவேல், வட்டாரத்தலைவர் கு. மேழிச்செல்வன், கல்வியாளர் தங்க. வீரப்பன், உதவித் தலைமை ஆசிரியர் ஆர். இராஜலெச்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாடத்தில் 100% தேர்ச்சியைத் தந்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. பெற்றோர் வணக்கம் செலுத்தப்பட்டு மாணவர்களுக்கு நிழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. தேர்வில் முதல் இரண்டு இடத்தில் வந்த அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் சான்று வழங்கப்பட்டது. நிறைவாக முதுகலை ஆசிரியர் க. மதியழகன் நன்றி கூறினார்.