வேப்பூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

வேப்பூர் அருகே விளம்பாவூரைச் சேர்ந்த ஏழுமலை (30) என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் அடரியிலிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். சேலம்-கடலூர் சாலையில் அ.களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி