வெண்கருப்பூர்: ஸ்டீல் பெஞ்ச் வழங்குதல்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் C. Ve. சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3,68,700.00 மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெண்கரும்பூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் அமர்வதற்காக ஸ்டீல் பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றை வழங்கினார். 

அவைகளை இன்று 16.6.2025 திங்கள் காலை 10.00 மணிக்கு மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக பள்ளி நிர்வாகத்திடம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஒப்படைத்தார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி