திட்டக்குடி: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ஆவினங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் திட்டக்குடி பகுதி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். கொடிக்களம் பகுதியில் ராஜேஷ் என்பவருடைய பெட்டிக்கடையில் சோதனை நடத்தியபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கடையில் இருந்த ராஜேஷின் தந்தை பாலகிருஷ்ணன் (68) என்பவரிடம் விசாரித்ததில், இருவரும் சேர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து, ராஜேஷை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி