கடலூர் மேற்கு மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை, செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய அரசியல் ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.