சமவேலைக்கு சம ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.