திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் ரூ. 2 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் தொடங்கப்பட்டது. விநாயகனந்தல், ரெட்டாக்குறிச்சி, மா. புதூர், சிறுகரும்பலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை 45 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.