திட்டக்குடி: இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திட்டக்குடி அடுத்த தரும குடிக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த 69 வயது சின்னபிள்ளை என்பவர் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பல்சர் பைக் மோதி படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திட்டக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி