திட்டக்குடி: சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு

திட்டக்குடி அருகே இடைசெருவாய் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் (68) என்ற விவசாய கூலித்தொழிலாளி, பெட்ரோல் போட்டுவிட்டு வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் நிகழ்ந்தது. பலத்த காயமடைந்த மணிவேல் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் அமுதன் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி