பின்னர் அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வேம்பு மகன் சேர்மகனி என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இது பற்றி தகவல் அறிந்த ராமநத்தம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.