திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சலம் (37) என்பவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆவினங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.