திட்டக்குடி: கார் லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் இன்று காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்தவர்களின் உடல்களை திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி