விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த மா. புடையூர் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஜோதி. இவருக்கும் மணிமேகலை என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஹரிஹரன் (9) என்ற மகனும், ஜனனி (8) என்ற மகளும் உள்ளனர். ஜோதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 9 ஆம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.18) வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து ஜோதி குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி