மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கிய இணைந்தகைகள் அறக்கட்டளை.

சுதந்திரதினவிழா மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கிய இணைந்தகைகள் அறக்கட்டளை.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் த. ஆ. பொ‌ அமுதா தலைமையில் 78 வது சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.
உதவி ஆசிரியர் வீ. சந்திரபாபு முன்னிலை வகித்தார். பீடிஏ ஆசிரியர் லெட்சுமிகோபி வரவேற்றார்.

தேசியக்கொடியினை தலைமை ஆசிரியர் அமுதா ஏற்றிவைத்தார் பின்னர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இணைந்த கைகள் அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன், செயலாளர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு டீசர்ட் வழங்கினார்கள் இந்தாண்டோடு நான்காம் ஆண்டு வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் நூலகர், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி