ராமநத்தம்: சரக்கு வாகன கண்ணாடி உடைப்பு; 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கீழகல்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவரின் சரக்கு வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த காசிநாதன் (38) மற்றும் திருவலாந்துறை அம்பேத்கர் நகர் செல்வகுமார் (30) ஆகியோர் ஆபாசமாக பேசி, கையால் அடித்து உடைத்தனர். இதன் மதிப்பு சுமார் 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி