கடலூர்: மரவள்ளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கழுதூர் அருகே மரவள்ளி கிழங்கு வியாபாரி தூக்குமரம் மீது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் பி.குயிலம்பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் முருகவேல் (வயது 40) என்பவர் இப்பகுதியில் தங்கி மரவள்ளி வியாபாரம் செய்து வந்தார். 
இந்நிலையில் நேற்று மதியம் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தின் வாராவரி ஓடை அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கினார். 

இதனை அவ்வழியே சென்றவர்கள் கண்டு வேப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்த முருகவேல் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முருகவேல் வீட்டிற்கு தகவல் அளித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி