பின்னர் பொயனப்பாடியில் உள்ள மாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் இனிப்புகள் வழங்கப்பட்டு அப்பகுதியில் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது. தொடர்ந்து பொனப்பாடி ஆண்டவர் செல்லியம்மன் திருக்கோயிலில் துரைவைகோ பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு லட்சுமி மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். தொடர்ந்து மறைந்த மாவட்ட பிரதிநிதி காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள். மேலும் சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவுகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்கள். இதில் கட்சியினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?