கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் இராமநத்தம் கூட்ரோட்டில் காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அரசு அனுமதி இன்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த டிஎன் 48 எஸ் 44 65 என் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்ததை அடுத்து, லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கொல்லை நடுத்தெருவைச் சேர்ந்த வீரமணி (40) என்பவரை காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் கைது செய்து, லாரியைப் பறிமுதல் செய்தார். மேலும், கைது செய்யப்பட்ட வீரமணி சிறையில் அடைக்கப்பட்டார்.