கொடிகளம்: கணவனை காணவில்லை என மனைவி புகார் அளிப்பு

திட்டக்குடி அடுத்த கொடிகளம் தோப்பு தெருவைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் (55) கடந்த 18 ஆம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சிவகாமி அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி