கடலூர்: கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி அரசு தொடக்க பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் வழிகாட்டுதலின்படி நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமையில்,தலைமை செயற்குழு உறுப்பினரும் நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி துவக்கிவைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ சத்து பெட்டகத்தை வழங்கினார்.

உடன், டாக்டர்கள் விமலா, மாலதி, ரேஷ்மா , எழில் செல்வம், சிங்கத்தமிழன் மற்றும் கடலூர் அண்ணாமலை அரசு சிறப்பு மருத்துவர், ஊராட்சி மன்ற தலைவர் நாரயணசாமி கிளைக் கழக செயலாளர் காமராஜ் , வேல்முருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் பானுபிரியமணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி