கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சரோஜா, மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார். மனமுடைந்த நிலையில் விஷம் குடித்த அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா உயிரிழந்தார். இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.