கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண்ணாடம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (19), 17 வயது சிறுமியை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 15.11.2025 அன்று திருமணம் செய்துள்ளார். இருவரும் பெண்ணாடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.