கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவுறுத்தலின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் (பொறுப்பு) சைபர் கிரைம் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை (RMO) நிலைய மருத்துவ அதிகாரி கவிதா, நிலைய கண்காணிப்பாளர் நடராஜன், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர்களின் தலைமையில் மருத்துவமனை கூட்ட அரங்கில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு போலீசாரால் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டு இணைய வழி குற்றம் பற்றி விளக்கப்பட்டது.
OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான App களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.