மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மற்றும் சிதம்பரம் எம்எல்ஏ மு. தமிமுன்அன்சாரி இன்று வெளியிட்ட அறிக்கையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வசந்த காலத்தின் நுழைவாயிலை சிறப்பாக கடந்துள்ளதாகவும், தொடர்ந்து வளமான எதிர்காலத்திற்கு வழி அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.