கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் - கொரக்கவாடி செல்லும் சாலையில் தொழுதூரில் அமைந்துள்ள நாவலர் நெடுஞ்செழியன் காலேஜ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் உள்ள கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் விடுதியின் பின்புறத்தில் பிறந்த ஒரு நாள் ஆகும் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற இராமநத்தம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் குழந்தையை மீட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.