எழுத்தூரில் 3 மாதங்களில் 19 பேர் பலி; மக்களிடையே அச்சம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதியதில் டிசம்பர் 24 அன்று 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு முந்தைய மாதம் அதே பகுதியில் கல்லூரி மாணவர்கள் வந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். இந்நிலையில், நேற்று எழுத்தூரில் மீண்டும் ஒரு கார் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனால், கடந்த 3 மாதங்களுக்குள் இப்பகுதியில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி