விழுப்புரம் அடுத்த சின்னக்குப்பத்தை சேர்ந்த விபீஷ்ணன் (27), கடந்த 5 ஆண்டுகளாக பண்ருட்டி அருகே உறவினர் வீட்டில் தங்கி பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 4 அன்று நண்பர் திருமணத்திற்காக திருச்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறவினர் பாலு அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காணாமல் போனதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.