பண்ருட்டியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் காவல் துறையினர் காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு களத்து மேடு புதுநகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சுமன் என்கிற ஜெயசுமன் என்பவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி