கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அடுத்த பாவாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் இனிப்புகள் கொடுத்து துவங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கி, அறிவுரை வழங்கினார். உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.