கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஆனி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்வாமி ஸ்ரீ பெரியாழ்வார் சாற்றுமறை மாலை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.